• Sep 20 2024

நீ நடந்தால் நடை அழகு- அடடே சிவகார்த்திகேயனின் மகனா இது?- அதுக்குள்ள இவ்வளவு பெரிதாக வளர்ந்திட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து விஜய் டிவியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருந்த சிவாவை வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் பாண்டிராஜ். அவர் இயக்கிய மெரினா படத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது பயணத்தை தொடங்கினார்.

அதன்பின்னர் தனுஷுடன் '3', வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர் நீச்சல், மான் கராத்தே என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மாஸ் காட்டினார். இப்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.


இதனை அடுத்து தற்பொழுது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பெஸ்ட சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இப்படத்தில் கதாநாயகியா அதிதி ஷங்கர் நடித்து வருகின்றார்.


இதனை அடுத்து கமல் தயாரிப்பில் SK 21 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தனது மாமன் பொண்ணைத் திருமணம் செய்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ன பெண் குழந்தையும் குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் முதன்முதலாக குகன் நடக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே அதற்குள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement