• Sep 21 2024

உன் படம் அதிக வசூலித்தால் நீ சூப்பர் ஸ்டார் ஆகிடுவியா?- விஜய்யைத் திட்டித் தீர்த்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவரது நடிப்பில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சைக்கும் பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கு முன்னதாக வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார்,"விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்" என்று கூறினார்.இதனால் சிலர் விஜய்க்கும் சிலர் ரஜினிக்கும் ஆதரவாகப் பேசியிருந்தனர்.


இந்நிலையில் பேட்டி ஒன்றி பங்கேற்ற தயாரிப்பாளர் கே ராஜன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறித்து பேசியுள்ளார்.அதில் அவர்பேசுகையில் இன்னைக்கு உன் படம் நாளைக்கு இன்னொருத்தர் படம் வசூல் அதிகமா இருக்கும் அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகிடுவியா? உன் தோல்வி படங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகியிருக்காங்க தெரியுமா? இப்போது வரை அவங்களால படம் எடுக்க முடிஞ்சதா? மக்கள் அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?

வாரிசு ஆடியோ லாஞ்சில் சரத்குமார், விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அப்போதே விஜய் இல்லை என்று மேடையில் சொல்லி இருக்கலாம். அந்த பட்டத்திற்கு உரியவர் ரஜினிகாந்த் என்றும் சொல்லி இருந்தால் விஜய் புகழ் எங்கேயோ சென்று இருக்கும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement