தமிழ் சினிமாவில் 80களில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநராக வலம் வருபவர் கே பாக்யரா. இது தவிர கதையாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத்திறமையை கொண்டு விளங்கினார் பாக்யராஜ்.
இவர் இசையமைப்பாளராகிய சம்பவத்தினையும் இளையராஜா தன்னை நடத்திய விதத்தையும் பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது கே பாக்யராஜ் இயக்கிய சின்ன வீடு படத்திற்கு பிறகு இசையமைப்பதற்காக இளையராஜாவை புக் செய்திருந்தாராம். படம் ஆரம்பிக்கும் போது கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடுங்க என்று இளையராஜா கேட்டுக்கொண்டாராம்.
அதேபோல் கதை ரெடி எப்போது கேக்குறீங்க என்று அவரது அசிஸ்ரெண்ட்-ஐ பார்த்து கேட்டேன். ஆனால் அசிஸ்டெண்ட் என்னிடம் வந்து அவரை வீட்டிற்கு சென்று பாருங்கள் என்று கூறினார். நான் ஏன் அவரது வீட்டுக்கு போக வேண்டும்.
ஸ்டுடியோவில் தானே எப்போதும் பார்ப்போம். அவர் எப்போது விருப்பமோ அப்போது சொல்லுங்க கம்போசிங் வெச்சிக்கலாம் என்று கூறிவிட்டேன். திரும்பவும் அசிஸ்டெண்ட் வீட்டுக்கு போய் பாருங்க என்று கூற நான் வந்துட்டு போனேன் என்று சார் கிட்ட சொல்லு என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
ஆனால் இளையாராஜா ஏன் பாக்யராஜ் வரல என்று கூட கேட்கவில்லை. அசிஸ்டெண்ட் அவரிடம் என்ன சொன்னாரு என்று தெரியவில்லை. அதன்பின் நானும் கண்டு கொள்ளவில்லை அப்படியே விட்டுவிட்டேன். இதன்மூலம் உருவானது தான் என்னுடைய கம்போசிங்.
பின் கங்கை அமரன் வந்து நீங்களும் அண்ணாவும் சேர்ந்து வேலை பண்ண வேண்டும் என்று கூறியதால் தான் நான் மீண்டும் இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றினேன் என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- கமலின் திரை வாழ்க்கையில் நடந்த மாபெரும் சாதனை.. தமிழகத்திலா..கொண்டாடி வரும் ரசிகர்கள்..!
- விசா கிடைச்சாச்சு அமெரிக்காவுக்கு பறக்க இருக்கும் டி.ராஜேந்திரன்- எப்போது பயணம் தெரியுமா?
- நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் எப்படி உள்ளது- ட்விட்டர் விமர்சனம்
- லவ் லெட்டர் கொடுத்து Propose செய்த அமீர் – பாவனி என்ன செய்தார் தெரியுமா..?
- கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்காக அரசு கொடுத்த அனுமதி- விஜய் , அஜித் படத்திற்கு கூட இல்லை..!
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!