இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்தப் படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளியின் பின்னர் த்ரிஷா நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் மன்சூர் அலி கான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படமானது 600கோடிகளைக் கடந்து வசூல் சாதனையை நிலை நாட்டி வருகின்றது. இதனையடுத்து தளபதி ரசிகர்கள் "லியோ படம் ஜெயிலர் வசூலை முறியடித்து விடும்,ஏனெனில் லியோ படத்தின் பிசினஸ் மட்டுமே ரூ. 434 கோடி வரை நடந்துள்ள நிலையில், படம் 1000கோடியை நெருங்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு எனக் கூறி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில் "லியோ திரைப்படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது, அதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை. அப்படி நடந்தால் என்னுடைய மீசையை நான் எடுத்துவிடுகிறேன்" எனக் கூறிப் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
Listen News!