• Nov 14 2024

காரில் ஏறுவதற்கே பயமாக இருக்கிறது நான்கு விபத்து ஏற்பட்டுள்ளது- கார் விபத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்த இர்ஃபான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல youtuber இர்ஃபானிற்கு அண்மையில் தான் திருமணம் முடிந்தது. இவரது திருமணப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இந்த நிலையில் இவர் சமீபத்தில் விபததுக்குள்ளானார். இவ் விபத்தில் பெண் ஒருவர் பலியானார். இந்த நிலையில் விபத்து குறித்து இர்பான் முதன் முதலாக கூறியள்ளார்.

அதில் அவர் கூறியதாவது கடந்த வாரம் 25 மே அன்று, மறுவீடு முடித்துவிட்டு தஞ்சாவூரில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தோம். திருமணம் முடிந்த புதிது என்பதால், தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று மறு வீடு முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தபோது, நான், என்னுடைய மச்சான், என்னுடைய தங்கை, மனைவி, உள்ளிட்ட குடும்பத்தினர் ஒரே காரில் வந்து கொண்டிருந்த போது, என்னுடைய மச்சான் தான் வண்டியை டிரைவ் பண்ணி கொண்டு வந்தார். 


சரியாக மறைமலை நகர் கிட்ட வரும்போது அங்கு தான் விபத்து ஏற்பட்டது.அங்கு சைடுல எல்லாம் பேரி கார்டு போட்டு இருந்தார்கள். அங்கிருந்து திடீரென ஒரு அம்மா வந்து விட்டார். இந்த விபத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மச்சான் வண்டியை திருப்பிய போதிலும், இந்த விபத்தை தவிர்க்க முடியவில்லை. அது ஒரு கிராசிங் ஆக இருந்திருந்தாலும் அந்த இடத்தில சிறு வெளிச்சம் கூட அங்கு இல்லை. அதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. எனினும் விபத்து ஏற்பட்டுவிட்டது.

இந்த விபத்தில் இறந்த அந்த பெண்மணியின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு வருந்தி இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இது போன்ற ஒரு விபத்தை சந்தித்த எங்களுக்கே இது மிகப் பெரிய இழப்பாக இருக்கும் நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எப்படி இருப்பார்கள். இந்த வீடியோவின் மூலம், முதலில் அவர்களின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தால் என்னுடைய குடும்பத்திலும் அனைவரும் உடைந்து போய்விட்டனர். இதனால் எங்களுடைய வாழ்க்கையிலும் அதை தவிர்த்து விட்டு செல்லமுடியவில்லை. தொடர்ந்து இந்த விபத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்துதான் வருகிறோம். அதிலும் நான் அந்த விபத்தை பின்னாடியில் இருந்து பார்த்தேன். இதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என் உடல் குலுங்குகிறது. காரில் ஏறுவதற்கே பயமாக இருக்கிறது.


என்னுடைய கார் விபத்தான அன்று மட்டும் அதே சாலையில் 4 விபத்து ஏற்பட்டது. ஆனால் யாருமே, எந்த செய்தி சேனலும் அந்த விபத்துகள் குறித்து பெரிதாக செய்திகள் வெளியிடவில்லை. தன்னுடைய கார் விபத்தை மட்டுமே அதிகம் ஃபோகஸ் செய்தனர். செய்திகள் வெளியிடுவது நல்ல விஷயம் தான் ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகளும் வெளியிடப்பட்டது. இப்படி பரவிய செய்திகளால் இன்னும் சில புதுப்புது பிரச்சனைகள் வருவது சரியான அல்ல. தற்போது, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லும். அதே போல் அடுத்து அடுத்தடுத்த பணிகளும் நடக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இரண்டு செய்தி சேனல்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியானது. என்னுடைய காரில் ஆவணங்கள் எதுவுமே இல்லை என கூறினார்கள். அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. என் தரப்பில் இருந்து கொடுக்க வேண்டிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பலர் என்னை வேதனை படுத்தவேண்டும் என்பதற்காகவே சில கருத்துக்களை வெளியிட்டனர். அதே போல் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என சிலர் நம்பி பாசிட்டிவான கருத்துக்களை பதிவிட்டார்கள் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..  


Advertisement

Advertisement