• Nov 19 2024

நான் தான் கவினின் பொண்டாட்டி- காதல் தோல்வியில் இருக்கும் லாஸ்லியாவுக்கு மோனிகா கொடுத்த பதிலடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர் தான் கவின்.இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதனை அடுத்து படவாய்ப்புக்களையும் பெற்று நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.


படம் கதை ரீதியாக எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவு கவினின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இதனை அடுத்து தற்பொழுது ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.இவருக்கு கடந்த 20ஆம் தேதி மோனிகா டேவிட் என்பவரை  திருமணம் செய்துகொண்டார். 

கவினுக்கு திருமணம் என்ற செய்தி வெளியானவுடன் பலரும் லாஸ்லியா குறித்தே பேசினார்கள். ஆனால் ஓபன் ஸ்டேட்மெண்ட் எதையும் லாஸ்லியா தெரிவிக்கவில்லை. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை என்று கவின் திருமண நாள் அன்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவு இணையத்தில் ட்ரெண்டானது.


இந்நிலையில் மோனிகா டேவிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில் கவின் கட்டிய தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நான் அதிகாரப்பூர்வமாக கவினின் மனைவி என குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து லாஸ்லியாவுக்குத்தான் மோனிகா பதிலடி கொடுத்திருக்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement