• Sep 21 2024

நானும் தப்பான படங்களில் நடிச்சு இருக்கேன்: பிரியா பவானி சங்கர்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளித்து விடுவார்.

தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். மேலும் இவர் தற்போது சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக்குவித்து விடுவார்கள்.

ப்ரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகின்றார்.மேலும் பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வயித்தெரிச்சலுக்கு ஆளாக்குவார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் தப்பான படங்களிலும் நடித்துள்ளேன் அந்த படங்களும் வெளியாகி விட்டதென வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் இப்படி ஓப்பனாக பேட்டியில் இவர் கூறியுள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியா பவானி சங்கர் ஒருசில சுமாரான ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்துள்ளதையே இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரியா பவானி ஷங்கர் தற்போது அருண் விஜய்யின் ’யானை’ தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ ஜெயம் ரவியின் ’அகிலன்’ எஸ்ஜே சூர்யாவின் ’பொம்மை’ சிம்புவின் ’பத்து தல’, கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘யானை’ ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ்ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement