தமிழ் திரையுலகில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது.
அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல படங்கள் லிஸ்ட் எடுக்கும் போது செல்வராகவன் அவர்கள் இயக்கி படங்கள் இருக்கும்.
அவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை என சில முக்கிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அத்தோடு கடைசியாக இவர் நானே வருவேன் என்ற படத்தை தனுஷ் வைத்து இயக்கியிருந்தார்.
இயக்குநர் என்பதை தாண்டி இப்போது நடிகராக அதிக படங்கள் நடித்து வருகிறார்.இவ்வாறுஇருக்கையில் விஜய்யின் பீஸ்ட், சாணிக் காயிதம், விஷாலின் மார்க் ஆண்மனி என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
செல்வராகவனின் ரசிகர் ஒருவர் காதல் கொண்டேன் படம் குறித்து டுவிட்டரில், விவேக் ஒரு காமெடியில் சொல்வார் இயக்குநர் ஒவ்வொரு புரோமோவையும் செதுக்கியிருக்கிறார் என, அப்படி ஒரு படம் என்று பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவில் தவறுதலாக செதுக்கியிருக்கிறார் என்பதற்கு பதிலாக செத்திருக்கார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு செல்வராகவன், ஏன் நண்பா, நான் சாகவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. என்னுடைய நேரத்தை கொஞ்சம் எடுத்துக்கொண்டேன், இப்போது வந்துவிட்டேன் என பதிவு செய்துள்ளார்.
Why my friend ? I'm not dead or retired. I have just spent some time for myself. I'm just in my forties .. And I'm back. https://t.co/CYdLcoG97k
Listen News!