பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் ஜேக் ஸ்பேரோ என்ற கேரக்டரில் நடித்து உலக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர் ஹாலிவுட் நடிகரான ஜானி டெப். தன்னை விட 25 வயது சிறியவரான ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹியர்ட்டை திருமணம் செய்து செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். 15 மாதங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
அந்த வகையில் அண்மையில் தனது மனைவியான ஆம்பர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் பிரகாரம் இந்த வழக்கில் ஜானிக்கு இழப்பீடு தொகையாக 78 கோடியும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாயை ஆம்பர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கிற்கு பிறகு முதல் முறையாக பேட்டி அளித்த ஆம்பர் ஹியர்ட் கூறியதாவது நான் சரியானதை தான் செய்தேன். என்ன நடந்தது, இதன் மூலம் நான் என்னவெல்லாம் பெற்றேன் என அனைத்தையும் என் மகளிடம் சொல்வேன் என்று கூறினார் .
மேலும் உங்களின் எதிர்காலத்தை தற்போது எப்படி பார்க்கிறீர்கள் என்நு கேட்ட போது உங்கள் அனைவருக்குமே தெரியுமே நான் முழு நேர தாயாக இருக்கிறேன். அதை தொடர போகிறேன் என்றார் . ஒருநாள் உங்கள் மகளிடம் இவை அனைத்தையும் சொல்ல வேண்டி வந்தால் என்ன சொல்வீர்கள் என ஆம்பரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எதுவாக இருந்தாலும் நான் சரியானதை தான் செய்தேன். எனக்காகவும் உண்மைக்காகவும் நிற்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன். எதையும் என் மகளிடம் மறைக்க போவதில்லை. நிச்சயம் ஒருநாள் அவளிடம் அனைத்தையும் சொல்வேன் என்று கூறியுள்ளார். ஆம்பரின் இந்த பரபரப்பான பேட்டி வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!