• Sep 20 2024

நான் தனுஷ் போல இல்லை என்னை குனிய சொல்லாதீங்க-முக்கிய பிரபலத்தை வறுத்தெடுத்த விஷால்- இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஷால் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவர் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இதில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்.

ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். 'லத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தை ப்ரமோஷன் செய்வதற்காக பல்வேறு சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார்.


அந்த வகையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது லத்தி படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "மருது படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நான் பாபா பாஸ்கர் மாஸ்டரிடம் அடிக்கடி கூறுவேன் நான் தனுஷ் கிடையாது. நீங்கள் தனுஷிற்கு கற்றுக் கொடுக்கும் டான்ஸை எனக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள். 

எனது உயரத்திற்கு நான் கீழே குனிந்து மேலே வருவதற்குள் அடுத்த சரணம் வந்துவிடும் என்று கூறினேன். அதற்கு அவர் நீ கண்டிப்பாக பண்ணுவாய் தயவு செய்து பண்ணு என்று கூறி பொறுமை காத்து என்னை நடனம் ஆட வைத்தார்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement