• Nov 17 2024

நயன்தாரா மட்டுமில்ல எந்த நடிகையுடனும் நான் அப்படி இல்லை- ஓபனாகப் பேசிய த்ரிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல போராட்ங்களுக்கு மத்தியிலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஹீரோயினாகவே நடித்து வருபவர் தான் த்ரிஷா.இவர் நடிப்பில் இன்றைய தினம் ராங்கி என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது.எம்.சரவணன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அத்தோடு இப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பு பாராட்டுவதற்கு உரியது என பலரும் கூறி வருகின்றனர். மேலும் சமீபகாலமாக த்ரிஷா பல பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றார். அந்த வகையில் அண்மையில் அவருக்கும் நயன்தாராவுக்கு இடையில் நடக்கும் பிரச்சினை குறித்து கேட்கப்பட்டது.


காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா கதாபாத்திரத்திற்கு த்ரிஷாவை தான் விக்னேஷ் சிவன் தேர்வு செய்தார். ஆனால் த்ரிஷா வேண்டாம் என நயன்தாரா சொன்னதால் சமந்தாவை நடிக்க வைத்தார் என்று தகவல் வெளியானது. இது குறித்து த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது.

த்ரிஷா கூறியதாவது, அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் இருக்கும். நோ சொல்வதே ஒரு தெளிவு தான். த்ரிஷாவா, நயன்தாராவானு நான் பார்ப்பது இல்லை. ரசிகர் மன்றங்கள் அவங்களுக்கு பிடித்த நடிகைகளுக்காகத் தான் போராடுவார்கள். ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் சரி. சில நேரம் மோசமாக போகிறது. நானும் சோஷியல் மீடியாவில் இருப்பதால் பார்க்கிறேன் என்றார்.

ஒருத்தர் காலை வார வேண்டாமே. இரண்டு பேரையும் பாராட்டலாமே. இரண்டு பேருமே டாப்பில் இருக்கலாமே. எனக்கும், நயனுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி தான். ஒரு ஹீரோயினா பிற ஹீரோயின்களுடன் நேரம் செலவிட முடியாது. நயன்தாராவை விருது விழாவில் மீட் பண்ணியிருப்போம். பேசினால் கூட சினிமா பற்றி பேச மாட்டோம் என த்ரிஷா மேலும் தெரிவித்தார்.


நயன்தாரா உள்பட எந்த நடிகையுடனும் எனக்கு நெருக்கமான நட்பு இல்லை. ஒருவருடன் நட்பு இருந்தால் தானே பிரச்சனை வர, அவர்கள் பேசாமல் போனால் வருத்தப்படணும். ஆனால் எனக்கு தான் யாருடனும் அந்த அளவுக்கு நெருக்கமான நட்பே இல்லையே என்று கூறியிருக்கிறார் த்ரிஷா.நடிக்க வந்த இடத்தில் போட்டியும் இல்லை, நட்பும் இல்லை. அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றார். 

இது தான் த்ரிஷாவின் கெரியர் ரகசியம் என்று என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார் என்று வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்தார். இதையடுத்து விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். நம்பர் ஒன் நடிகர் பற்றி த்ரிஷாவிடம் கேட்டதற்கு, இரண்டு பேருமே பெரிய சூப்பர் ஸ்டார்கள். இதில் ஒருவரை மட்டும் தேர்வு செய்ய முடியாது. நம்பர் எல்லாம் நாம் துவக்கி வைத்த விஷயம் என மிகவும் தெளிவாகவும், அழகாகவும் பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















Advertisement

Advertisement