• Nov 10 2024

சமயம் பார்த்து சாயம் பூசி சாதகமாய் சாயும் சகுனி நான் இல்லை- சமூகவலைத்தளங்களில் முட்டி மோதிய அசீம் மற்றும் ஏடிகே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

மேலும் அசீமின் வெற்றி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.மற்றவர்களை இழிவாக பேசி விளையாட்டை தவறான முறையில் விளையாடினால் பிக் பாஸில் வெற்றி வெற்றி பெற முடியுமா என்று கேட்டு வருகின்றனர்.அசீம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் மரியாதை குறைவாக பேசுகிறார் என்றும், தனலட்சிமியை பொம்மை டாஸ்கின் போது தவறான இடத்தில் கையை வைத்து தள்ளினார் என்ற குற்றசாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்து அபியூஸர் அசீம் என்று பதிவிட்டு வந்தனர். 


சமீபத்தில் அசீம் மற்றும் தனலட்சுமி பேட்டி ஒன்றில் பங்கேற்றபோது ‘அசீமை அப்யூசர் என்றால் விக்ரமனும் தான் அப்யூசர்.’விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் விளையாடும்போது என்னுடைய கால்களை பாஸ் இழுத்து விளையாடினார். மேலும் என்னுடைய உடையை இழுத்த நபருக்கு ஆதரவாக பேசினார். அதுவும் அப்யூஸ் தானே? அப்படியிருக்க அசீம் செய்தது மட்டுமே எப்படி அப்யூசாக இருக்க முடியும் என்று கூறினார் தனலட்சுமி.

 இப்படி ஒரு நிலையில் தனலட்சுமியின் இந்த பேச்சு குறித்து பதிவிட்டு இருக்கும் Adk ‘ஒருவரை தவறாக தொடுவதற்கு, ஆரோக்கியமான விளையாட்டின் போது துணி லேசாக கிழிவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.


அதே போல இந்த பிக் பாஸ் புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான். அதனால் பேட்டிகளில் மற்றவர்களை தரம்தாழ்த்த வேண்டாம். சக போட்டியாளர்களை பற்றி தரம்தாழ்த்த கக்குவதை விட்டுவிட்டு உங்களின் அடுத்த வேலைகளுக்காக மீடியாவை பயன்படுத்துங்கள். இந்த ஷோ முடிந்துவிட்டது,எனவே நிஜ வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். adkவின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ளார் அசீம்.


அதில் ”ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது முதலில் அதை யார் ஆரம்பித்தார்கள் என்பதை பாருங்கள் உங்களுக்கு அபிமான போட்டியாளர் குறை சொன்னால் அமைதியாக இருப்பீர்கள் இதுவே குறை சொன்னால் மட்டும் கொதிப்பீர்களா பிக் பாஸ் முடிந்து விட்டது நான் தற்போது என்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருக்கிறேன் உங்களின் புகழை சரியாக பயன்படுத்தி வளருங்கள் நண்பா’ என்று பதிவிட்டு இருக்கிறார். அதே போல மற்றொரு பதிவில் ‘சமயம் பார்த்து சாயம் பூசி சாதகமாய் சாயும் சகுனி அல்ல நான், ஏழை பணக்காரன் என பாகுபாடு இல்லாமல் ஒன்றுபோல் மேல் நோக்கி எரியும் தீபம். என்றும் என் பேச்சு ஒன்றுதான் ! “என் நண்பனாய் இருக்க தனி தகுதி தேவை இல்லை, என் எதிரியை இருக்க உனக்கொரு தகுதி இல்லை. வளர்த்துக்கொள்ள வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார் அசீம்.


Advertisement

Advertisement