இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதுவரை அவர் எடுத்த அத்தனை படங்களும் ஹிட்டாக அவருக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. திரைக்கதையில் செய்யும் மேஜிக், மேக்கிங்கில் காட்டும் வித்தியாசம் என ரவுண்டு கட்டி அடிக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்குகிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இவ்வளவு நடிகர்கள் இருக்கும்போது எல்லோருக்குமான ஸ்க்ரீன் ஸ்பேஸை லோகேஷ் எப்படி கொடுத்திருப்பார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
லியோ படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னையில் ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடந்துவருகிறது. இந்தச் சூழலில் படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் விஜய் வாழ்வார். அதை சுற்றி நடப்பதுதான் கதை என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார் எனவும்; சஞ்சய் தத் விஜய்யின் தந்தையாக வருவார் எனவும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்துக்கு இப்போதைய தலைமுறை பெரும் ரசிகராக இருக்கிறது. அதேசமயம் அவரது படத்தில் எந்த காதல் ஜோடியையும் சேர்த்து வைக்காததும் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டாவது வழக்கம். இந்நிலையில் தன்னுடைய படங்களில் எதற்காக காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பதில்லை என்பது குறித்து பேசியிருக்கிறார்.
விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "நான் காதலை சேர்த்து வைக்காதது தொடர்பாக வீடியோ மீம்ஸை பார்ப்பேன். ஆனால், காதலை கொள்ளும் அளவுக்கு நான் ஒன்றும் சாடிஸ்ட் இல்லை. கதைக்கு தேவைப்படுவதைத்தான் செய்கிறேன். ஏதாவது ஒரு படத்தில் காதலை சேர்த்து வைத்துவிடுகிறேன்.
விஜய் அவரது இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் புகைப்படத்தில் என்ன லுக்கில் இருக்கிறாரோ அதே லுக்கில்தான் லியோ படத்திலும் வருவார். காஷ்மீரில் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அதனால்தான் கடைநிலை ஊழியர்கள் பட்ட கஷ்டத்தை காண்பிக்க வேண்டும் என அந்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டோம்" என்றார்.
Listen News!