விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். அதுமட்டுமல்லாது எஸ்.ஜே.சூர்யா, புஷ்பா வில்லன் சுனில், இயக்குநர் செல்வராகவன் எனப் பலரும் நடிக்கின்றனர்.
மேலும் மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் உடைய ஷூட்டிங் ஆனது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனையடுத்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட உள்ளது. அந்தவகையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த டீசரை நடிகர் விஜய்யிடம் போட்டுக்காட்டி படக்குழுவினர் ஆசி பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால் "என்னுடைய அன்பான அண்ணன் மற்றும் ஹீரோ விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னுடைய மார்க் ஆண்டனி பட டீசரை பார்த்ததற்கு நன்றி. எப்போதும் உங்கள் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.
Listen News!