• Sep 21 2024

'இப்பவும் ஆட ரெடியாத் தான் இருக்கிறேன் ஆனால் யாரும் என்னை சேர்க்கமாட்டாங்க'-நடிகர் மன்சூர் அலிகான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கமல், விஜய்சேதுபதி ,பகத் பாசில், சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம் இந்தப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது. இப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் சக்க சக்க பாடல் இடம் பெற்றிருந்தது. இப்பாடல் விக்ரம் படத்தில் இடம் பெற்றது குறித்து மன்சூர் அல்கானின் கருத்து என்ன என்பது பற்றி அவரிடம் ஒரு தொகுப்பாளர் கேட்டிருந்தார்.

இப்போது பதில் கூறிய மன்சூர் அலிகான் ரொம்ப சந்தோசமா இருக்கு. அவங்களுக்கு இந்த பாட்டு தேவைப்பட்டிருக்கு அதனால தான் இந்த பாட்டை எடுத்திருக்கிறாங்க. கமல் சேர் இந்தப் படத்தில சூப்பராக நடிச்சிருக்கிறாங்க அவங்க வயசில இவ்வளவு பண்றது பெரிய விஷயம்.

அப்பவும் என்னால ஆட முடியும் ஆனால் இப்போ எந்த இயக்குநரும் என்னை எடுக்கமாட்டாங்க. விக்ரம் படத்தில மற்றவங்களும் நல்லா நடிச்சிருக்கிறாங்க. கைதி படத்தில நடிக்க கேட்டாங்க என்னால நடிக்க முடில இப்போ இயக்குநரும் வேற லெவலில் பேமஸ் ஆகிட்டாரு இனி அவர் பாலிவூட் பக்கம் அவங்க போய்டுவாங்க.

நானும் நல்ல படத்தில நடிக்க ரெடியாத் தான் இருக்கிறேன் உடம்ப எல்லாம் பிட்டா தான் வைச்சிருக்கிறேன். இது தவிர தி லெஜன்ட் படத்திலும் நடித்திருக்கிறேன் என்று கூறினார். இது தவிர இன்னும் சில நடிகர்களுடனும் திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement