மலையாள சினிமாவில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பாப்கார்ன் என்கிற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் சம்யுக்தா.இதையடுத்து தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்களில் நடித்திருந்தார்.இப்படங்கள் எதுவும் வெற்றியை பெற்றுக் கொடுக்காததால் மீண்டும் மலையாளத்திற்கே திரும்பினார்.
பின்னர் மீண்டும் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. கடந்த மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் 2 வாரங்களை கடந்தும் வெற்றி நடை போட்டு வருகின்றது. வாத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை சம்யுக்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நடிகை சம்யுக்தா, தனது நடிப்பில் வெளியான திரைப்படம் பிளாப் ஆனது தெரிந்ததும் தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்க மறுத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மலையாள தயாரிப்பாளரான சாண்ட்ரா தாமஸ் என்பவர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘எடக்காடு பட்டாலியன்’. இப்படத்தில் நடிகை சம்யுக்தா தான் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்திற்காக முதலில் 65 சதவீதம் சம்பளத்தை வாங்கிவிட்ட சம்யுக்தா, எஞ்சியுள்ள சம்பளத்தை ரிலீசுக்கு பின் வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
இப்படம் ரிலீசாகி தோல்வி அடைந்ததை அடுத்து, தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ், சம்யுக்தாவிற்கு எஞ்சியுள்ள சம்பளத்தை கொடுக்க சென்றுள்ளார். அப்போது படம் தோல்வி அடைந்ததால் அந்த தொகையை சம்யுக்தா வாங்க மறுத்துவிட்டாராம். கேட்ட சம்பளம் கொடுக்கலேனா டப்பிங் பேச மாட்டேன், புரமோஷனுக்கு வர மாட்டேன்னு முரண்டு பிடிக்கும் நாயகிகள் இருக்கும் இந்த காலத்தில், இப்படி ஒரு நடிகையா என வாயடைத்து போனார் சாண்ட்ரா தாமஸ். நடிகை சம்யுக்தாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Listen News!