தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து பீஸ்ட் பட இயக்குநரான நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் தனது 169 வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இருப்பினும் பீஸ்ட் பட தோல்வியால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே குறைவடைந்துள்ளதோடு இது குறித்த எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகமலும் இருந்தது.
இந்நிலையில் தற்போது தலைவர் 169 படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனை மறைமுகமாக சன் பிக்சர்ஸ் தற்போது ஒரு சிகப்பு நிற ஸ்டார் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பிரபல ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம்-உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
- பூவே உனக்காக சீரியல் திடீரென முடிவடைவதற்கு காரணம் இது தானாம்- கிசுகிசுக்கப்படும் புதிய தகவல்
- சிவகார்த்திகேயனுடன் மோத நினைக்கும் ப்ளூ சட்டை மாறன் – கண்டபாட்டுக்குத் திட்டி வரும் ரசிகர்கள்
- ஈஷா சத்குருவின் Save Soil நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!