• Sep 20 2024

லியோ சிறப்பு காட்சி காலை 4 மணிக்கு திரையிடுமாறு கோரிக்கை... திரைப்படம் குறித்து நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனஜராஜ் இயக்கத்தில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் லியோ. இதில் நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்திக்கான ரசிகர்கள் சிறப்பு காட்சி நேரம் மாற்றம் தொடர்பான கோரிக்கை ஒன்று முன்னவைக்கப்பட்டுள்ளது.

லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு காலை 4 மணிக்கு அனுமதி தரவேண்டும் என்று படக்குழு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது. காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கே திரையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது. அந்த அனுமதியில் நேரம் ஏதும் குறிப்பிடாமல் ஒரு நாளைக்கு 5 காட்ச்சிகள் திரையிட அனுமதி வழங்கியது. லியோ திரைப்பட சிறப்பு காட்சி  தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் உள்துறை முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்பு காட்சி மட்டுமே திரையிடுமாறு உத்தரவு வழங்கியிருந்தது.


இதில் காலை 9.00 மணிமுதல் இரவு 1.30 மணி வரை திரையிடுவதற்கு அனுமதிக்குமாறும் மேலும் விதிகளை மீறுபவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு காலை 4 மணிக்கு அனுமதி தரவேண்டும் என்று படக்குழு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது. காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கே திரையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்த முறைபாடுக்கான விசாரணையானாது 1.00 மணிக்கு நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement