• Sep 20 2024

தங்கம்போல் தகதகவென மின்னும் சேலையில்... இடுப்பழகினை கிளாமர் காட்டிய கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் போட்டோஸ்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த தசரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கிய இப்படம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியால் செம்ம குஷியில் உள்ளாராம் .

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் சைரன், மாமன்னன், ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சைரன் படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்த்தக்கது.

இந்நிலையில் தற்போது  தங்க நிற சேலையில் தேவதை போல் காட்சியளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டராகிராமில் பகிர்ந்துள்ளார்.இது தற்போது செம வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement