அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது..பலர் அதை வெளியே சொல்வதற்கு கஷ்ட்டப்பட்டு மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.ஆனால் ஒரு சிலர் தைரியமாக அதை வெளியில் சொல்லி தங்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களுக்கு பாடம் புகட்டி வருகிறார்கள்.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கதாநாயகி ஆக நடித்துவரும் சுவாதி சர்மா தான் ஆரம்பகாலகட்டத்தில் சந்தித்த பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார்.இவர் காலேஜ் படித்து முடித்ததும் மாடலிங் மூலமாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தாராம்.அப்போது இவருடைய அம்மாவோடு தான் வாய்ப்பு தேடி போயிருக்கிறார் பல இடங்கள் அவரோட தான் ஏறி இறங்கினார்.
அந்த நேரத்தில் ஒரு நபர் இவரிடம் இவருடைய அம்மா முன்பு வைத்து அட்வெஸ்மென்ட் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.அதற்கு அவருடைய அம்மா அதிர்ச்சியாகி கோபமடைந்து இருக்கிறார். அப்போது சுவாதி வேகமாக கத்தி அந்த நபரை திட்டிவிட்டாராம். பிறகு வெளியே வந்த சுவாதியிடம் அவருடைய அம்மா ரொம்பவே கோபப்பட்டு இருக்கிறார்.
இதனால் தான் இந்த நடிப்பு வேண்டாம் என்று சொல்றது,நான் கூட இருக்கும்போதே உன்னிடம் இப்படி இந்த ஆட்கள் நடந்து கொள்கிறார்கள் என்றால் நீ வெளியே தனியா நடிக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்று பயந்து இருக்கிறார். பிறகு அம்மாவை ரொம்பவே கஷ்டப்பட்டு தான் சமாதானப்படுத்தினேன் என்று சுவாதி கூறி இருக்கும் நிலையில் இந்த ஒரு நிகழ்வை நினைத்து,நினைத்தாலே இனிக்கும் சீரியலில் சூட்டிங்காக சென்னைக்கு வருவதற்கு ரொம்பவே பயந்தேன் என்று கூறியிருக்கிறார் இப்படி எல்லாம் நடந்தது முக்கிய காரணம் அதனால் நடிப்பை வெறுத்தேன் என்றார்.
அதை தொடர்ந்து தான் இவருக்கு தமிழில் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் பொம்மி கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது பொம்மி இறந்து போய் இருப்பது போன்று கதை போய்க்கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து அதே வீட்டிற்குள் ராணியாக மீண்டும் இவரே வந்து நடித்துக் கொண்டிருக்கிறார் அதனால் மக்கள் விறுவிறுப்பாக இந்த சீரியலை ரசித்து பாத்து கொண்டு உள்ளனர்.
Listen News!