நடிகர் விஜய் நடிப்பதை விட்டிட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார். அரசியலுக்கு வந்த பின்னர் சிலர் செய்யவதாக கூறும் செயல்களை, அரசியலுக்கு வருவதற்கு முன்பே விஜய் செய்து காட்டி வருகின்றார். இதனால் தனக்கான அரசியல் பிரவேசத்தை விஜய் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலுக்கான கட்டமைப்பையும் பலமாக்கி வரும் விஜய், 'லியோ' படத்தின் படப்பிடிப்பை முடித்த கையேடு 'விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்பின் போது, முதல் முறையாக தன்னுடைய அரசியல் வருகை குறித்து பேசிய விஜய் அரசியலுக்கு வந்தால், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியதாகவும் கூறப்பட்டது. மேலும் விஜய் எப்போது சொன்னாலும், தீவிர பணியில் இறங்க தயாராக இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
தற்போது விஜய் சார்பில், 'விஜய் மக்கள் இயக்க' பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது "தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திரு உருவ சிலைகளுக்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யுமாறு, தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், 'தளபதி விஜய் பயிலகம்' ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
Listen News!