• Nov 10 2024

நடிகை சார்மியுடன் காதலா? 55 வயது இயக்குநர் கொடுத்த விளக்கம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகை சார்மி கவுர். தமிழில் சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானார். ஆகா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சார்மி கவூர், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.


மேலும் 35 வயதான சார்மி கவுர் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். இந்நிலையில் நடிகை சார்மி கவுர், பிரபல தெலுங்கு இயக்குநரான புரி ஜெகன்னாத்துடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வருவதால் இருவருக்கும் காதல் என தகவல் பரவி வருகிறது. அத்தோடு இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் கசிந்தது.



இந்நிலையில் பட விழா ஒன்றில் பேசிய இயக்குநர் புரி ஜெகன்னாத் காதல் குறித்து பரவும் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதில் நடிகை சார்மி தனக்கு பல விஷயங்களில் ஆதரவாக இருப்பதாகவும் ஆகையால் தாங்கள் இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு தான் ஒரு 50 வயது பெண்ணுடன் சேர்ந்து படம் தயாரித்தால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற அவர் சார்மி இன்னும் இளமையான பெண்ணாக இருப்பதால் இணைத்து தவறாக பேசுகிறார்கள் என்று வருத்தப்பட்டுள்ளார். காதல், கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாட்கள்தான் இருக்கம் நட்புதான் நிரந்தரம் என்றும் புரி ஜெகன்னாத் தெரிவித்துள்ளார்.



சார்மி 13 வயது சிறுமியாக இருக்கும் போதில் இருந்தே தனக்கு அவரை தெரியும் என்றும் 20 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் சேர்ந்து பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் புரி. மேலும் சார்மி எப்போதும் தனக்கு ஒரு நல்ல தோழி என்றும் இயக்குநர் புரி ஜெகன்னாத் தெரிவித்துள்ளார்.

55 வயதான இயக்குநர் புரி ஜெகன்னாத்துக்கு லாவண்யா என்ற மனைவி உள்ளார். அத்தோடு ஆகாஷ் புரி என்ற மகனும், பவித்ரா புரி என்ற மகளும் உள்ளனர். ஆகாஷ் புரி தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.


Advertisement

Advertisement