தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டேனியல் பாலாஜி. 'சித்தி' என்ற தொடரின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த இவர் பின்னர் 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'ஏப்ரல் மாதத்தில்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அவர் 'காதல் கொண்டேன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன்' போன்ற பல படங்களில் கொடூரமான வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் வில்லன் நடிகரான அவரை பற்றி பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, 'சாவடி அடிச்சி சமாதி கட்டுற வில்லனாக அவரை பார்த்திருப்பீங்க, ஆனால் ஆவடியில் அம்மன் கோவில் கட்டிட்டு இருக்கார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்' என விஜய் கூறி இருந்தார். அத்தோடு 'படத்துல தான் கத்தி, நிஜத்துல ரொம்ப பக்தி' எனவும் டேனியல் பாலாஜியை பற்றி பாராட்டி பேசி இருந்தார் விஜய்.
இந்நிலையில் தற்போது டேனியல் பாலாஜி ஆவடியில் சொந்தமாக கட்டி இருக்கும் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் வீடியோவை அவரே வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த வீடியோ..!
Listen News!