• Nov 17 2024

ஷிவினுக்கு கைகொடுத்த கணவர்... உடனே தட்டி விட்ட மைனா... வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6ஆவது சீசனானது தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. ஏனைய சீசன்களைப் போலவே இந்த சீசனும் விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து சென்ற வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் நுழைந்துள்ளார்கள். அதில் மைனாவின் குடும்பமும் ஒன்று. மைனாவின் கணவர் மற்றும் மகன் வருகை தந்துள்ளனர். ஷிவின் ஏற்கெனவே ஒருமுறை மைனாவிடம் உங்க கணவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறி இருந்தார். 


இந்நிலையில் அங்கு வந்த மைனாவின் கணவர் ஷிவினுக்கு கை கொடுக்கின்றார். அதற்கு உடனே மைனா கை கொடுக்கவிடாது தட்டி விடுகின்றார். இருப்பினும் பின்னர்  சிரித்து விட்டு மைனாவின் கணவர் மீண்டும் ஷிவினுக்கு கை கொடுக்கின்றார். 

அதுமட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும் வெளிய உனக்கு ஒரு நல்ல பிரண்டாக நான் இருப்பேன் எனக் கூறுகின்றார். இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement