தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டங்ககளில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருகின்றன. வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடிப்பதோடு இவரது பஞ்ச் டயலொக் எல்லாம் மிகவும் பிரபல்யமானவை.
நடிப்பைத் தவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக சில காலத்திலேயே நடிப்பதை விட்டு விட்டு முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.
இவ்வாறுஇருக்கையில் தமிழ்நாடு ஒரு நல்ல அரசியல் தலைவரை இழந்துள்ளது என்பது தான் உண்மை. அரசியலில் நுழைந்த குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி அளவிற்கு உயர்ந்தார். வேகமாக சென்ற அவரது அரசியல் பயணம் உடல்நலக் குறைவால் அப்படியே கடைசி நிலைக்கு தள்ளப்பட்டது.இப்போது கேப்டன் வெளியே வருவதே இல்லை, வீட்டிலேயே முடிங்கி இருக்கிறார்.
அவர் தனது படங்களில் நாட்டின் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பதை காட்டிக்கொண்டே இருந்தார். எங்களது கேப்டன் இப்படி ஆகிவிட்டாரே என தற்போது அவரது நிலைமையை கண்டு ரசிகர்கள் பலரும் வருந்துகின்றனர்.
நடிகர் விஜயகாந்த் தனது வாழ்க்கையில் நிறைய பேருக்கு உதவிகள் செய்துள்ளார், அது நமக்கு தெரிந்த விஷயம் தான். அரசியலில் கேட்பன் வளர்ந்துவந்த காலகட்டத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டதாம்.
காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை சோதனை செய்துள்ளனர். மேலும் அது முடியும்போது தலைமை அதிகாரி ராபர்ட், சார் உங்களைத் தொல்லை செய்ய நாங்கள் நினைக்கவில்லை, இது எங்களது கடமை.அத்தோடு உங்க ரெக்கார்டுகளை பார்க்கும் போது எவ்வளவு நல்லது செய்துள்ளீர்கள் என்பது தெரிகிறது, இதை நிறுத்திவிடாதீர்கள் என நெகிழ்ந்து பேசிவிட்டு சென்றாராம்.
Listen News!