• Sep 20 2024

இந்தாம்மா ஏய்.. 40% சொத்துப் போச்சுன்னு கவலை இல்ல.. உனக்கு இந்த மாதிரி ட்ரெஸ் கேட்குதா..? ஜனனியை வச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


அந்தவகையில் இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல்  அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் அசைக்க முடியாத சாதனைப் படைத்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். மதுமிதா சமீபத்தில் புதிய கார் ஒன்றினை வாங்கியுள்ளார். 


சீரியலைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா புதிய கார் வாங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் க்யூட்டாக இருக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் "நீங்க சீரியலில் தான் கிராமத்துப் பெண் மாதிரி, நிஜத்தில் பட்டணத்துப் பெண்ணாக இருக்கிறீர்களே" எனக் கூறிக் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு ரசிகர் குணசேகரன் பார்த்தால் "இந்தம்மா ஏய் 40% சொத்துப் போச்சுன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இந்த மாதிரி ட்ரஸ் போட்டிற்று சுத்துறியே" எனத் திட்டப்போவதாகவும் கூறி வருகின்றார். 


Advertisement

Advertisement