ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகை ரம்யா ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலை உருவாக்கிய அனைவரையும் வெகுவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.
இந்தியா என்றாலே வெளிநாட்டினரின் கண்களுக்கு ஹிந்தி நாடாகவே தெரியப்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தெலுங்கு பாடலான நாட்டு நாட்டு பாடலின் வெற்றி தென்னிந்தியாவை உலகறிய செய்துள்ளது என்றும் இந்தியா வெறுமனே ஹிந்தி நாடு என்கிற மாயை உடைத்தெறிக்கப்பட்டுள்ளது என்றும் நச்சென கூறியுள்ளார்.
இந்திய சினிமா என்றாலே பாலிவுட் தான் என்கிற நினைப்பும் தற்போது உடைந்துள்ளது எனக் கூறிய திவ்யா இந்தியா வெறும் பாலிவுட் மட்டும் கிடையாது என்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான சாட்டையை சுழற்றி உள்ளார். தெலுங்கு திரைப்படம் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், கன்னட திரைப்படங்களான கேஜிஎஃப் 2, காந்தாரா உள்ளிட்ட படங்களும் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளன.
பெங்களூருவில் ஆட்டோ டிரைவரை வடமாநில பயணி ஒருவர் ஹிந்தியில் பேசு, எனக் கூற நான் ஏன் ஹிந்தியில் பேசணும் என எதிர்ப்பு குரல் கொடுத்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அந்த வீடியோவை ஷேர் செய்து நாட்டு நாட்டு பாடலுக்கு வாழ்த்து சொன்னது மட்டுமின்றி பாஜகவினரின் ஹிந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா ட்வீட் போட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!