• Sep 20 2024

திடீரென ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த இந்தியன் 2 படக்குழு- இது தான் காரணமா?- புதிய ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில்  வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த ஒரு திரைப்படம் இந்தியன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தினை  ஷங்கர் இயக்க கமல் ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார்.இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா ? என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நேரத்தில் கண்டிப்பாக வரும் என அறிவித்தார் கமல்ஹாசன்.அதன்படி தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் தற்போது அதன் ரிலீஸ் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே  இந்தியன் 2 உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.மேலும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரும் இப் படத்தில் நடித்து உள்ளனர்.அத்தோடு இன்னும் பல பிரபலங்கள் கூட்டணியோடு இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 


இப்படம் அடுத்த (2024) ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருக்கிறது. இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு  2024 ஓகஸ்ட் 15 -ஆம் திகதி  வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது .இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு  படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement