• Sep 20 2024

பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம்- இதோ படப்பிடிப்பு புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் இந்தியன் 2.இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார்


கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது.


இதற்கான பிரத்யேக பூஜை சென்னையில் நடந்தது.‌இதில் இயக்குநர் ஷங்கர், கலை இயக்குநர் முத்து ராஜ், நடிகர்கள் ஜெய் பிரகாஷ், பாபி சிம்ஹா, லைக்கா நிறுவன அதிகாரி தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதன்மூலம் ரவி வர்மன் ISC மீண்டும் இந்தியன் 2 படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். 2019 ஆம் ஆண்டு நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் ரவி வர்மன் ISC ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் எந்திரன் புகழ் ரத்னவேலு ISC ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இந்நிலையில் ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார்.இப்போது படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement