• Sep 20 2024

கமல்ஹாசன் இல்லாமல் இந்தியன் 2 திரைப்படமா?- இயக்குநர் ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன். இப்படம் பல ஆண்டுகளுக்கு முதல் வெளியாகியிருந்தாலும் அவ்வளவு இலகுவில் ரசிகர்களால் மறந்து விட முடியாது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அண்மையில் இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பானது 60% நிறைவடைந்துள்ளது.அதனை அடுத்து சில காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.


மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்னும் படத்தில நடித்திருந்தார். இப்படம் பிரமாண்ட அளவில் வெற்றி பெற்றதோடு கமலின் மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது.

அத்தோடு ஷங்கரும் ராம் சரணை வைத்து RC15 படத்தை இயக்க சென்றுவிட்டார்.இந்த நிலையில் இப்படத்தின்

படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு  இந்தியன் 2 திரைப்படத்தில் இணைய இருக்கிறார் ஷங்கர்.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் 24-ம் தேதி தொடங்க இருக்கிறதாம்.முதலில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு, பின் அவர் படக்குழுவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

Advertisement

Advertisement