ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த ஒரு திரைப்படம் இந்தியன்.இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நேரத்தில் கண்டிப்பாக வரும் என அறிவித்தார் கமல்ஹாசன். அதன்படி தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் நாட்டில் லஞ்சத்திற்கு எதிராக போராடும் கதையாக இந்தியன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது.இப்படத்தில் கமல் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் பல வருடங்களுக்கு பின் இந்தியன் 2 துவங்கப்பட்டது.
இந்தியன் 2 படத்தின் சில காட்சிகள் தென் ஆப்பிரிக்காவில் படம்பிடிக்கப்பட்டது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரகுப் ப்ரீத் சிங், பிரியா பவானி, காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல் பட ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!