• Sep 21 2024

சென்னை ஏர்போட்டில் 'இந்தியன்-2' படப்பிடிப்பு... கோடிக்கணக்கில் பணம் செலுத்தி அனுமதி பெற்ற படக்குழுவினர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

1996-ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படமானது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. அந்த முதல் பாகத்தில் சேனாபதி மற்றும் சந்துரு என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் கமல். இதனையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. 


இந்தியன் 2 படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அந்தவகையில் தற்போது சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முக்கியக் காட்சிகள், விமான நிலைய கழிவறைகளில் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில் இந்தியன் 2 படக்குழுவினர் விமான நிலைய படப்பிடிப்புக்காக ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 1.24 கோடி ரூபாய் செலுத்தி அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது போலீஸ் தொடர்பான காட்சிகள் நடைபெற்று வருவதாக ஏராளமான துணை நடிகர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. 


இதற்கு முன்னர் அனுமதியின்றி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது உரிய அனுமதியுடன் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement