• Sep 20 2024

இலங்கையில் குவிந்த இந்தியப் பிரபலங்கள்... ஓஹோ இவங்க எல்லாம் வந்தாங்களா... என்ன விஷயம்..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையில் நடைபெற்ற ''இசையென்னும் பெயின்கில்லர்'' இசை நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் பிரபல தொகுப்பாளர் விஜய்யுடன்  தென்னிந்திய பிரபல முன்னணி பாடகர்கள் கலந்துகொண்டு ஆயிரம் கணக்கான ரசிகர்களை இசை மழையில் நனைத்துள்ளனர்.

2023.09.09 நேற்றையதினம் இலங்கையில் மாபெரும்  '' இசையென்னும் பெயின் கில்லர் '' இசைநிகழ்ச்சி மாலை 6 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்  நடைபெற்றது.


இசையென்னும் பிரமாண்ட இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க மக்கள் ஆர்வமாக வருகை தந்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தென்னிந்திய பிரபல தொகுப்பாளர் விஜய் அவர்கள் இணைந்திருந்தார். 


மேலும் தென்னிந்தியாவின் புகழ்பூத்த  பாடகர்களான பாடகர் ஸ்ரீனிவாஸ், சுவேதமோகன், உன்னிமேனன், சைந்தவி ,விஜயபிரகாஷ் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் இணைந்திருந்தனர்.


மிகவும் அருமையாக மனதை கவரக்கூடிய  பாடல்களை பாடி வருகை தந்திருந்த ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இசை நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களும் இவர்களோடு பாடி தங்களின் ஆதரவையும் ,அன்பையும் வெளிப்படுத்தி இருந்தனர். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement