உலக அளவில் கடந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களுக்கும், அதில் நடித்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவிக்கும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது.
96 அகாடமி ஆஸ்கர் விருது விழாவில் ஆவணப்படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் 'டு கில் எ டைகர்' என்ற ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டது.
கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பான, "டு கில் எ டைகர்" புது தில்லியில் பிறந்த நிஷா பஹுஜாவால் தயாரிக்கப்பட்டது. இவர் டோரண்டோவில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், குறித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதைப் பெறும் என எதிர்பார்த்த நிலையில் 'டு கில் எ டைகர் ஆவணப்படம் ஆஸ்கர் விருதை இழந்தது.
மேலும், ஜார்கண்டை சேர்ந்த ஒரு ஆதிவாசி விவசாயி, உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளான தன் மகளுக்கு நீதி கேட்டு போராடுவதை வலியோடு சொல்வதாக இந்த ஆவணப்படம் காணப்படுகிறது.
Listen News!