2024 நாடாளுமன்ற தேர்தலை பலப்படுத்தும் நோக்கிலும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரை ஒன்றினை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை ராஜஸ்தானிலும் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் அங்கு இடம்பெற்ற அந்த யாத்திரையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, பிரியங்கா மகள் மிராயா வத்ரா ஆகியோர் கலந்துகொண்டனர். அதாவது ராஜஸ்தானில் மகிளா சசக்திகரன் திவாஸ் என்ற பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ராகுல்காந்தி பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் அந்த யாத்திரையில் பெரும்பாலான பெண்களுடன் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது அவரது நடைபயணத்தின்போது, பெண்கள் மற்றும் கலைக்குழுவினர், பாரம்பரிய ராஜஸ்தானி ஆடைகளை அணிந்து நாட்டுப்புற பாடல்களை பாடி ஆடி அனைவரையும் வரவேற்றனர். அப்போது, அவர்கள் பிரியங்கா காந்தியையும் தங்களுடன் ஆட அழைத்தனர். அதைதொடர்ந்து, அவரும் சிறிது நேரம் அவர்களுடன் ஆடி மகிழ்ந்தார்.
மேலும் அந்த யாத்திரையானது இன்றைய தினம் டெல்கியில் நடைபெறுகின்றது. அதில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொள்ளவிருக்கின்றார். அதுமட்டுமல்லாது இன்று 5.30 மணியளவில் இந்த யாத்திரையை நிறைவு செய்யவும் உள்ளனர். பின்பு ஜனவரி மாதம் 3-ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுடன் இணைந்து பிரியங்கா காந்தியின் மகள் மிராயா வத்ரா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த மக்கள் பலரும் மியாரா அச்சு அசலாக அவங்க அம்மா பிரியங்கா காந்தியைப் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.
Listen News!