• Nov 19 2024

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று பிறந்த நாள்...! குவியும் வாழ்த்துக்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபுதேவா 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.பிரபுதேவா இந்திய திரையுலகே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்ததற்கு அவரது தந்தையின் பங்கு மிகஅதிகம். முகூர் சுந்தரால் தான் பிரபுதேவா நடனத்தில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடிந்தது. பிரபு தேவாவின் தந்தை முகூர் சுந்தர் சிறந்த நடன அமைப்பாளராக இருந்துள்ளார். நடிப்பு, நடனம் ஆகியவற்றை அவர் தனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டார்.

நடன இயக்குநர், நடிகர் என்பதுடன் இயக்குநராகவும் களமிறங்கினார். விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கினார்.பிரபுதேவா, இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என கொண்டாடப்பட்டு வருபவர். ஒல்லியான தேகம், முகத்தில் எப்போதும் தாடி என தனித்துக் காணப்படுபவர்.ரப்பர் போன்ற தனது உடலை வளைத்து இவர் ஆடும் நடனத்தை கண் சிமிட்டால் ரசிகர்-ரசிகைகள் எக்கச்சக்கம்.இவரது நடனத்தைக் கண்டு ரசிப்பதற்காகவே திரையரங்கிற்கு படையெடுப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மைசூரில் பிறந்தார் பிரபுதேவை. இவரது தந்தையும் பிரபல நடனக் கலைஞர் தான். திரையுலகில் சுந்தரம் என்ற தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பிரபலமான நடனக் கலைஞர் பிரபு தேவாவின் தந்தை.

ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் இவருடன் பிறந்த சகோதரர்கள். ராஜு சுந்தரமும் பிரபர நடனக் கலைஞர் தான்.தந்தையின் ரத்தம் என்பதாலோ என்னவே நடனத்தை இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.

பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார்.

இயக்குநர் ஷங்கரின் முதல் திரைப்படமான ஜெண்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே படத்திற்கு பிரபுதேவா மிகச் சிறப்பாக நடனம் ஆடி அசத்தினார்.

அதன்பிறகே இவருக்கு புகழ்வெளிச்சம் பட ஆரம்பித்தது.பின்னர் அதே ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் நடிகராக முத்திரை பதித்தார். பின்னர் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து அசத்தினார். ஏழையின் சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுதே, பெண்ணின் மனதை தொட்டு, விஐபி, மின்சார கனவு உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஹிட் அடித்தன.

மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் இன்றளவு இளசுகளால் மிகவும் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது.கதாநாயகியை தொடாமல் அந்தப் பாடலில் நடனமாடியிருப்பார் பிரபுதேவா. அந்தப் பாடலுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார்.

நடன இயக்குநர், நடிகர் என்பதுடன் இயக்குநராகவும் களமிறங்கினார். விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கினார். அதிரிபுதிரி ஹிட்டடித்து நல்ல பெயரை பிரபுதேவாவிற்கு வாங்கிக் கொடுத்தது.

அடுத்து வில்லு, எங்கேயும் காதல் என படங்களை இயக்கினார். பின்னர், ஹிந்தி திரைப்பட உலகிலும் இயக்குநராக சில திரைப்படங்களை இயக்கினார்.கலைத் துறையில் முக்கியப் பங்காற்றியதற்காக இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கெளரவித்தது.


Advertisement

Advertisement