காமெடியன் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற ரோலில் நடித்து மிகவும் பிரபலம் ஆனார்.
இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் அதற்கு முன்பே அவர் டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு இணையத்தில் பிரபலமாகத்தான் இருந்தார்.
பிகில் படத்திற்கு பிறகு இவர் ஜீ தமிழின் சர்வைவர் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும் இவர் அதிலிருந்து பாதியிலேயே எலிமினேட் ஆனார்.
அதுமட்டுமல்லாமல் இந்திரஜா குடியரசு தின ஸ்பெஷலாக புலி போன்ற மேக்கப் போட்டுகொண்டு போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவராலும் கவரப்பட்டார்.
இந்நிலையில் இவரது அம்மாவின் பிறந்தநாளை புகைப்படம் எடுத்து கொண்டாடியுள்ளார். அப் புகைபடம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...
Listen News!