பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில், விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
கல்கி எழுதிய வரலாற்று சிறப்புக்கள் கொண்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க எம்.ஜி.ஆர், உலக நாயகன் கமல்ஹாசன் முதல்கொண்டு சிலர் முயற்சி செய்த நிலையில் ஒரு சில காரணங்களால் அது நிறைவேறாமலே போனது. மேலும் இந்த கதையை படமாக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு, சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் படமாக இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக கடின உழைப்பை செலுத்தி, அனைத்து, நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பாலும், பல சினிமா தொழிலாளர்களின் உழைப்பாலும் தான் இன்று, இந்த படம் இரண்டு பாகங்களாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.
மேலும் தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி,விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரபு, பார்த்திபன், முதல்கொண்டு பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே இந்த ஒரு படத்திற்காக பல படங்களின் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர்.
இதில் நடிக்க கமிட்டான பல நடிகர்கள், படம்பிடிக்க துவங்க தாமதம் ஆனதாலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டி இருந்ததாலும் படத்தில் இருந்து விலகினார்கள்.
அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க சம்மதித்து, பின்னர் வெளியேறுவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு.மேலும் இவர்கள் இருவரும் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது அளித்து இருக்கும் பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தில் தளபதி விஜய் வந்தியத்தேவன் ரோலிலும், மகேஷ் பாபு அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார்.
Listen News!