அல்லு அர்ஜுன், ராஷ்மிகாமந்தனா, பஹத்பாசில்நடித்துசூப்பர்ஹிட்டானதிரைப்படம் ‘புஷ்பா-தி ரைஸ்’. சுகுமார்இயக்கிய இப்படத்தில் சமந்தா ஒருபாடலுக்கு குத்தாட்டம் போட்டு உலக அளவில் பிரபலமானார்.
மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையில்அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன. அத்தோடு பான்இந்தியாபடமாக வெளியானஇப்படம், அனைத்துமொழிகளிலும் நல்ல வரவேற்பைபெற்றது. அதன் தொர்ச்சியாக 2ம் பாகம் தற்பொழுது உருவாகி வருகின்றது.
புஸ்பா- தி ரூல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.அத்தோடு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
எனினும் இந்த நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அடுத்த வாரம் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அதாவது பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதியில் படத்தின் படப்பிடிப்பு இரண்டிலிருந்து- மூன்று வாரங்களுக்கு நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!