• Nov 17 2024

ஸ்கூலில் பெஸ்ட் ரிசல்ட் வாங்கிய குஷியில் இருக்கும் இனியா- யாரிடமும் பேச முடியாமல் தவிக்கும் பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொணண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா சமையல் ஆடர் எடுத்த இடத்திற்கு தன்னுடன் சமைப்பவர்களுடன் சேர்ந்து செல்கின்றார். அங்கே பாக்கியாவைக் கண்டதும் அவர்கள் சின்னதா நிச்சயதார்த்தம் வைச்சிருக்கிறோம். 11மணிக்கெல்லாம் சாப்பாடு பரிமாறனும் உங்க சாப்பாட்டை மாப்பிள்ளை கல்யாணம் வரைக்கும் மறக்கக் கூடாது என்று சொல்ல பாக்கியா கவலைப்படாதீங்க நாங்க சூப்பராக பண்ணிடுவோம் என்று சொல்கின்றோம்.


மறுபுறம் இனியா அம்மாவை இன்னும் காணல என்றும் ரிசல்ட் வருவதை நினைச்சாலே பயமா இருக்கு என்று புலம்புகின்றார். இப்போது செழியன் ,ஜெனி ,அமிர்தா, எழில் எல்லோரும் இனியாவை ஆறுதல்ப்படுத்த இனியா கடவுளைக் கும்பிடுகின்றார்.அப்போது ராமமூர்த்தி மணி பத்து ஆகிடுச்சு ரிசல்ட் வந்திட்டா என்று பாரு என்று சொல்கின்றார்.

அப்போது எழில் ரிசல்ட் என்ன என்று பார்க்கும் போது இனியா 600/549 மார்க் வாங்கியிருப்பதாக சொல்ல எல்லோரும் சந்தோஷப்பட்டு இனியவைக் கட்டிப்பிடித்து தமது வாழ்த்துக்களைச் சொல்கின்றனர். பின்னர் இனியா உடனே பாக்கியாவுக்க கோஃல் பண்ணுகின்றார். ஆனால் பாக்கியாவுக்கு சிக்னல் வேலை செய்யல என்பதால் போனை கட் செய்து விடுகின்றார்.


தொர்ந்து பாக்கியா செல்வியிடம் நீ எல்லாத்தையும் பார்த்துப்ப தானே நான் கிளம்பவா என்று கேட்க செல்வி தான் பார்த்துக்கிறேன் என்று சொல்கின்றார். எதையும் சரியாக செய்வதாக இல்லை. இதனால் பாக்கியா என்ன செய்வது இனியாகிட்ட போன்லையாவது பேவோம் என்று போனை எடுக்கின்றார். ஆனால் போனில் சிக்னல் வேலை செய்யல, இதனால் எல்லா இடத்திலையும் போனைக் கொண்டு போய் வைத்து சிக்னல் வேலை செய்யுதா என்று பார்க்க கூடவே செல்வியும் செல்வதால் திருமணம் நடத்துபவர் என்ன செஃல்யியா எடுக்கிறீங்க என்று வந்து திட்டுகின்றார்.

பின்னர் இனியாவுக்கு ஸ்கூலில் இருந்து போன் பண்ணி ஸ்கூலில் பெஸ்ட் ராங் வாங்கியிருக்கிறாய் என்று வாழ்த்துத் தெரிவித்ததோடு உங்க பேரன்ஸையும் கூட்டிட்டு அவசரமாக ஸ்கூலுக்கு வாங்க என்று சொல்ல இனியா ரொம்ப சந்தோஷப்படுகின்றார். அங்கே பாக்கியாவிடம் பந்தியை ஆரம்பிக்கலாமா என்று வீட்டு முதலாளி கேட்க அவரும் ஆரம்பிக்கலாம் சேர் என்று சொல்லி எல்லாவற்றையும் எடுத்துச் செல்கின்றார். பின்னர் இனியாவிடம் ஒருமுறையாவது பேசனும் என்று போன் எடுக்க முயற்சி செய்கின்றார். ஆனால் போனில் சிக்னல் வேலை செய்யாததால் என்ன செய்வதென்று யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement