• Nov 17 2024

ஆன்மீகத்தில் ஆர்வம் இருக்கு மூட நம்பிக்கை மட்டும் கிடையாது- ரஜினியின் சுவாரஸியமான பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இவர் நடிப்பைத் தாண்டி ஆன்மீகத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இதனால் இமயமலைக்கு அடிக்கடி சென்று தியானம் மேற்கொள்வார்,

ஆன்மிகவாதியாக இருந்தாலும், எனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது என்று வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினியை பிரபல நடிகையான சுஹாசினி ரஜினிகாந்தை ஒரு முறை பேட்டி எடுத்தார். அதில் ரஜினிகாந்த் நிறைய விடயங்களைப் பகிர்ந்திருந்தார்.

அதாவது ரஜினிகாந்த் அறிமுகமான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில், இசை சம்மந்தப்பட்ட சொற்களை திரையில் காட்டி ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி இருப்பார் இயக்குநர் பாலச்சந்தர். இத் திரைப்படத்தில் ஶ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற ஆனந்தத்தில் கமல் இருக்கும்போது, ஶ்ரீவித்யாவின் முன்னாள் கணவரான ரஜினிகாந்து அங்கு வந்து தவறான சொற்களை பயன்படுத்தி இருப்பார்.

இந்தக் காட்சியை குறிப்பிட்டு, முதன் முறையாக திரையில் தோன்றும்போது இயக்குநர் இப்படி அபசகுனமான சொல்லை போட்டுவிட்டாரே என்று என்றைக்காவது நீங்கள் வருத்தப்பட்டதுண்டா என்று சுஹாசினி கேட்க, எனக்கு மூட நம்பிக்கை இல்லை. அதனால் நான் வருத்தப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் பாலச்சந்தர் அவர்கள் முதலில் இயக்கிய படத்திற்கு நீர்க்குமிழி என்றுதான் தலைப்பு வைத்திருந்தார்.

அதற்காக அவர் என்ன நீர்க்குமிழி போலவா ஆகிவிட்டார்? இரும்புக்குமிழி போலல்லவா இருக்கிறார். மேலும், அவர் அப்போதே பல டெக்னிக்குகளை பயன்படுத்தியிருப்பார். அதில் ஒன்றுதான் இது என்று ரஜினிகாந்த பதிலளித்திருப்பார்.

மேற்கொண்டு, பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்ததில் எந்தக் காட்சி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு, புன்னகை மன்னன் படத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மலையிலிருந்து கீழே விழுந்து மரத்தில் மாட்டிக்கொள்ளும்போது கமல் நடித்த காட்சிதான் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும். எப்போது பார்த்தாலும் மெய் சிலிர்த்து போய்விடுவேன் என்றும் ரஜினி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement