'லியோ' திரைப்படம் நாளை உலகெங்கிலும் வெளியாக உள்ள நிலையில், தளபதியின் ரசிகர்கள் திரையரங்குகளில் ஈசல் போல குவிந்து வருகின்றனர்.
'லியோ' படத்தை பார்வையிடுவதற்காக கோலிவுட் சினிமாவே வெறித்தனமாக காத்திருக்கிறது. இப்படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில், நாளைய தினம் வெளியாகவுள்ள 'லியோ' படம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அதன்படி, யார் யாரெல்லாம் இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுக்குறித்து வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டுள்ள தகவலில், 'லியோ' படத்தில் தனுஷ், ராம்சரண் உள்ளிட்ட யாருமே கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை.கமல் மட்டுமே இப்படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 'விக்ரம்' படத்தில் இடம்பெற்றதைப் போன்ற ரோலக்ஸ் மாதிரியான கெஸ்ட் ரோல் லியோவில் இடம்பெற்றிருக்காது என்பது உறுதி ஆகியுள்ளது.
இதன் காரணமாக ரசிகர்கள் இவ்வாறான காட்சிகளை எதிர்பார்க்காமல் திரையரங்கிற்கு சென்றால் நன்றாக இருக்கும்.
ஆனாலும் லோகேஷ் கனகராஜ் படத்தில் இடம்பெறும் அனைத்து அம்சங்களும் 'லியோ' படத்திலும் இடம்பெற்றிருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை எனலாம்.
அதன்படி, நாளை திரையரங்கில் 'லியோ' படத்தை பார்க்க முனைகின்ற ரசிகர்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் இருப்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
Listen News!