• Nov 14 2024

தனது மகள் பற்றி நடிகர் ஆர்யா பகிர்ந்த சுவாரஸியமான தகவல்- வைரலாகும் வீடியோ- ரொம்ப கியூட்டாக இருக்கிறாங்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் சமீபகாலத்தில் வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில், நடிகர் ஆர்யா உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டெடி, சர்பட்டா படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, அரண்மனை 3 படம் விரைவில் வெளியாகியது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வெற்றியையே பெற்றது.இதனை அடுத்தும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். 


இவர் நடிகை சாயிஷாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அக்குழந்தைக்கு அரியானா என்று பெயர் வைத்துள்ளனர்.குழந்தை பிறந்த பின்னர் சாயிஷாவும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் இவர் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான பத்துத் தல திரைப்படத்தில் ராவடி என்னும் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இதனை அடுத்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

இப்படியான நிலையில் ஆர்யா தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து மும்பை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது மகள் முதன்முறையாக முழு டிக்கெட் எடுத்து விமானத்தில் செல்லவுள்ளார் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை சாயிஷா தன்னுடைய சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement