• Sep 20 2024

அவரே தோள்ல கையை போட்டு போட்டோ எடுங்க என்றாரு,- விஜய்யை சந்தித்தது குறித்து இர்பான் போட்ட நெகிழ்ச்சி வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் லலித் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ.  தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் இந்தத் திரைப்படம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

 மேலும் படத்தில் பயங்கரமான வன்முறை காட்சிகள் இருப்பதால், 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தான் இப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியும் என்று செய்தி வெளியாகி உள்ளது.


தமிழக அரசு லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது

மேலும் லியோ படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் குஷியில் இருக்கும் நிலையில் பிரபல யூடியூப் பிரபலமான இர்பான் லியோ பட ஷுட்டிங்கின் போது நடிகர் விஜய்யை சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தற்பொழுது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 


அதில் விஜய் சேர் ஒரு சீன் முடிச்சிட்டு கேரவனுக்கு போகும் போது தான் என்னை வந்து பார்த்தாரு.வீட்டில எல்லோரும் எப்பிடி இருக்கிறாங்க என்று கேட்டாரு, அவரே என் தோள்ல கையைப் போட்டு, போட்டோ எடுங்க என்று சொன்னாரு, அது எனக்கு அப்பிடியே வானத்தில பறக்கிற மாதிரி சந்தோஷமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement