• Sep 21 2024

விபத்து நடந்த போது காரில் இருந்த இர்பான்.. கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸ்..நடந்தது இது தான்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல யூடியூபர் இர்பானின் கார் ஏற்படுத்திய விபத்தில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.உணவு விமர்சகர் இர்பான், உணவை ரசித்து சாப்பிடுவதையே தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு பிரபலமானார்.உள்ளுர் முதல் வெளியூர் வரை எங்கு எந்த உணவு சுவையாக இருக்கும் என்பது இவருக்கு அத்துபடி.

உணவு பிரியரான இர்பானுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு என்று தான் கூற வேண்டும், இவர் ரசித்து ரசித்து சாப்பிடுவதை பார்க்க நமக்கே வாயில் எச்சில் வடியும் அந்த அளவுக்கு உணவை ரசித்து சாப்பிடுவார். இந்த நிகழ்ச்சியின் மூலம், இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பின் திருமணம் நின்று போனது.

எனினும் தற்போது ஓராண்டு இடைவேளைக்கு பின், யூடியூபர் இர்பானுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக அழைப்பிதழ்களை திரையுலக பிரபலங்களையும், அரசியல் பிரபலங்களுக்கு நேரில் சென்று கொடுத்தார். அத்தோடு , தனது நெருங்கிய சொந்தங்களுக்கு பரிசு பொருளுடன் அழைப்பிதழ் கொடுத்தார்.

இதையடுத்து, மே 14ந் தேதி இர்பானின் திருமணம் மிகவும் தடபுடலாக நடந்தது. இவர்கள் திருமணத்தின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டது. இதற்கு அவருடைய சமூகத்தில் எதிர்ப்புகளும் கிளம்பின. நமது சமூகத்தில் இப்படி வீடியோக்களை எடுத்து சோசியல் மீடியாவில்  பரப்புவது ஏற்புடையதல்ல என்று விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், இர்பானின் கார் செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் பகுதியில் பத்மாவதி என்ற 55 மதிக்கத்தக்க பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

எனினும் இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்த போது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா என்பதையும் , கார் ஓட்டியது யார் என்பதையும் அங்கிருந்த கேமராவில் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், விபத்தின் போது இர்பான் காரில் இருந்தது தெரியவந்துள்ளது. இர்பானின் காரை அவருடைய ஓட்டுனர் அசாருதீன் என்பவர் ஒட்டியதாக தெரிகிறது.

Advertisement

Advertisement