• Sep 20 2024

பிரமாண்ட இயக்குநரின் படம் கைமாறுகிறதா? வெளிவராதா உண்மை..மறைவில் நடக்கும் பேச்சுவார்த்தை

tech / 2 years ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இத்திரைப்படத்தில் உலகநாயகனுக்கு ஜோடியாக மனிஷா கோய்ரல்லா நடித்துள்ளார். மேலும் நாசர், சுகன்யா, கவுண்டமணி, செந்தில் ஆகிய பலர் நடித்துள்ளனர். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவான திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் வெளிவிட்டது.

இந்நிலையில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. இந்த இந்தியன் திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து காரணமாக 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை.

படம் சம்பந்தமாக லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் டான் திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்தியன் திரைப்படத்தில் தொடங்க உள்ளோம் என கூறியிருந்தார். இதையடுத்து முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மற்றும் ஒரு அதிகாரபூர்வமற்ற தகவல்கள் சினிமா வட்டத்தில் பரவி வருகிறது. இந்தப் படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமே மீதி படத்தை தயாரித்து தங்கள் நிறுவனத்தின் பெயரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement