• Sep 20 2024

மகள் வயது பெண்ணை திருமணம் செய்ய போகிறாரா ஆமிர் கான்...அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆமீர் கான். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை.

இவ்வாறுஇருக்கையில், ஆமிர் கான் குறித்து ஷாக்கிங் தகவல் வெளிவந்துள்ளது. அத்தோடு நடிகர் ஆமிர் கான் தனது மகள் வயதில் இருக்கும் பெண் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது.


மேலும் அவர் வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகை ஃபாத்திமா சனா சாயிக் தான். தங்கல் படத்தில் ஆமிர் கானின் மகளாக நடித்த நடிகை ஃபாத்திமா சனா சாயிக்குடன் விரைவில் ஆமிர் கானுக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் தங்கல் படத்திலிருந்து காதலித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே சில சர்ச்சை இதுகுறித்து எழுந்த நிலையில், விரைவில் இந்த திருமணம் நடைபெறும் என கிசுகிசுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.

ஆமிர் கான் கடந்த 1986ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்து கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.


இதன் பின் கிரண் ராவ் என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கடந்த 2021ஆம் ஆண்டு அவரிடமும் விவாகரத்து பெற்றுக்கொண்டார். நடிகர் ஆமிர் கானுக்கு Junaid Khan, Ira Khan என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement