அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் விடா முயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே 1ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியானது. இப்படத்தின் ஷூட்டிங் மே மாத மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு இப்படத்தை செம்ம ஸ்பீடாக எடுத்து முடிக்க இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டு உள்ளாராம்.
அதன்படி விடா முயற்சி பட ஷூட்டிங்கை மொத்தமாக 70 நாட்களில் படமாக்கி முடிக்க அவர் பிளான் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் லைகா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இதனால் இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் இரண்டாம் வாரம் தான் ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் இருந்து அஜித் குமார் விலக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்களாம். இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அப்படி விலகினாலும் யாருடைய இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகின்றார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!