• Nov 10 2024

நடிகர் அரவிந்த் சுவாமி நடந்தும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?- சூப்பரான பிஸ்னஸ்மேன் தான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் அரவிந்த் சாமி. தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்ததோடு தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள நெக்கட்டிவ் ரோலில் நடித்தும் வருகின்றார்.

சினிமாவை தாண்டி அரவிந்தசாமி சிறந்த தொழிலதிபரும் கூட. நடிப்பு என்பது அவரின் விருப்பம் மட்டுமே. திருமணத்திற்கு பின் குடும்பத்தில் சில பிரச்சனை ஏற்பட்டு மனைவியை பிரிந்தார். ஆனாலும், குழந்தைகள் இவரின் பாதுகாப்பில் இருந்தனர், எனவே, 2000ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகள் மற்றும் தொழில் என இரண்டில் மட்டுமே கவனம் செலுத்தினார். மேலும், அவரின் தந்தை நடத்தி வந்த வி டி சுவாமி அண்ட் கம்பெனி நிறுவனத்தை நடத்த துவங்கினார்.


2005ம் வருடம் ஒரு கார் விபத்தில் சிக்கி அவரின் முதுகு தண்டில் பலத்த அடிபட்டது. அதனால், அவரின் கால்கள் செயல் இழந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. 5 வருடங்கள் சிகிச்சை பெற்றார். அதிக மருந்துகளை எடுத்துக்கொண்டதால் பக்க விளைவாக உடல் எடை கூடி, தலைமுடியும் கொட்டி ஆளே மாறினார். மருத்துவர்களின் சிகிச்சையில் குணமடைந்த அரவிந்த் சாமி மீண்டும் தனது தொழிலில் கவனம் செலுத்தினார்.

தனது நிறுவனத்தை InterPro Global என பெயர் மாற்றினார். அதன்பின் Talent Maximus என்ற நிறுவனதையும் துவங்கினார். Rocket Reach போன்ற இணையதளங்களை இந்த நிறுவனம்தான் நடத்துகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.3,300 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


ஒருபக்கம் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து தனக்கு பிடித்த கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். இவர் நடித்து வெளியான தனி ஒருவன், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

Advertisement

Advertisement