• Nov 14 2024

நடிகர் ஃபகத் பாசில் இப்படி ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கின்றாரா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நஸ்ரியாவின் கணவர் ஃபகத் பாசில் உடல் இளைத்தது போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றார். இதனை அடுத்து அவருக்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மலையாள நடிகரான ஃபகத் பாசில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை 50ற்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார். இவரது யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருவதையும் காணலாம்.


முதலில் மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் நெக்கடிவ் ரோலில் நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இருப்பினும் இவரை சிறந்த நடிகராக அடையாளப்படுத்தியது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமே எனலாம்.இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.இப்படத்தைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிந்து வருவதையும் காணலாம்.

மேலும் நடிகை நஸ்ரியாவின் கணவரான இவர் தற்பொழுது உடல் இளைத்துக் காணப்படுவதால் இவருக்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஓணம் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் அவரது பிறந்த நாளில் வெளியாகிய புகைப்படத்திலும் அவர் உடல் இளைத்துக் காணப்பட்டதாலும் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் ஃபகத் பாசில் விக்ரம் படத்தின் பாகம் 2விலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அத்தோடு இவருடைய உடல் இவ்வளவு மெலிய என்ன காரணம் என்பது இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement